Home வணிகம்/தொழில் நுட்பம் இந்த ஆண்டு இறுதிக்குள் மேசைக் கணினிகளை விட தட்டைக் கணினிகள் அதிகமாக விற்பனையாகும்!

இந்த ஆண்டு இறுதிக்குள் மேசைக் கணினிகளை விட தட்டைக் கணினிகள் அதிகமாக விற்பனையாகும்!

488
0
SHARE
Ad

Tablets-Featureஅக்டோபர் 4 – கணினி உலகில் வெகு வேகமாக ஏற்பட்டு வரும் தொழில் நுட்ப புரட்சிகளின் காரணமாக, தட்டை (Tablet) கணினிக்  கருவிகளை வாங்கும் மோகம் உலகமெங்கும் மக்களிடையே அதிகரித்து  வருகின்றது.

#TamilSchoolmychoice

இந்த ஆண்டு இறுதிக்குள் உலகமெங்கும் தட்டைக் கணினிகள் மேசைக் கணினிகளை விட அதிகமாக விற்பனையாகும் என்றும் 2015 ஆண்டு முடிவுக்குள் பயன்பாட்டிலும் விற்பனையிலும் தட்டைகள் மேசைக் கணினிகளை விட அதிகமாக இருக்கும் என்றும் ஆய்வுகள் காட்டுகின்றன.

தட்டைக் கருவிகளில் விலை மலிவாக இருப்பவைக்கு அதிக தேவைகள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள மக்களின் வாங்கும் சக்தி மற்றும் கல்வித் துறைக்கு ஏற்படப் போகும் தேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில் மலிவு விலை தட்டைகளுக்கு அதிக அளவுக்கு கிராக்கி ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் தற்போது திறன் பேசிகளும், பேப்லட்ஸ் (phablets) எனப்படும் 5 அங்குலத்திற்கும் அதிகமான திரை அளவு கொண்ட செல்பேசிகளும் அதிக அளவில் மக்களை ஈர்த்து வருகின்றன.

எனவே, அடுத்த கட்ட மாற்றமாக, இந்த திறன்பேசிகள் தட்டைக் கணினிகளை விட அதிகமாக விற்பனையாகி நாளடைவில் தட்டைக் கருவிகளில் பயன்பாட்டைக் குறைத்து விடும் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

தற்போது, மேசைக் கணினிகளைக் கொண்டும், தட்டைக் கருவிகளைக் கொண்டும் செய்யப்படும் செயல்கள் திறன்பேசிகளின்  மூலமாகவும் சாத்தியமாகும் நிலைமை ஏற்படும்போது மக்கள் தட்டைக் கருவிகளை நாடுவதும் நாளடைவில் குறைந்து போகும்.