Home கலை உலகம் ஓநாயும் ஆட்டுக் குட்டியும் – படத்தை ஓட்ட ஊர் ஊராக சுவரொட்டி ஒட்டும் மிஷ்கின்!

ஓநாயும் ஆட்டுக் குட்டியும் – படத்தை ஓட்ட ஊர் ஊராக சுவரொட்டி ஒட்டும் மிஷ்கின்!

909
0
SHARE
Ad

Mysskin-Featureஅக்டோபர் 4 – கடந்த வாரம் இயக்குநர் மிஷ்கினின் உருவாக்கத்தில் வெளியாகி பலதரப்பட்டவர்களின் பாராட்டைப் பெற்றிருக்கும் படம் “ஓநாயும் ஆட்டுக் குட்டியும்”.

#TamilSchoolmychoice

இருந்தாலும் இப்படம் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற அளவுக்கு ரசிகர்களின் பாராட்டைப் பெறவில்லை, வசூலிலும் பெரிய வெற்றியில்லை என்பதுதான் இயக்குநர் தற்போது சந்தித்து வரும் சோகம்.

இதுகுறித்து,  இயக்குநர் மிஷ்கின் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து கூறியதாவது:-

“இந்த படம் பலரின் பாராட்டை பெற்றிருப்பது சோகத்திலும் ஒரு சந்தோஷத்தைதருகிறது. இந்த படத்தைத் தயாரிக்க யாருமே முன்வரவில்லை. என் கதையைக் கேட்டுதயாரிப்பாளர்கள் வரிசையில் நின்றார்கள் என்றெல்லாம் பொய் சொல்லமாட்டேன்.முகமூடிஎன்ற தோல்விப்படம் கொடுத்த பண நெருக்கடி, மனநெருக்கடிகளுக்கிடையில் முகமூடிபடத்திற்கு பிறகு ஆறாவது படம் இயக்கும்என்னை நம்பி ஒரு தயாரிப்பாளர் கூட வரவில்லை. அதனால்தான் நானே இந்த படத்தைதயாரித்தேன்”

முகமூடிக்கு பிறகு அடுத்த படம் எடுக்கலாம் என்று இருந்தபோது என்னைசுற்றி இருந்தவர்கள் நிறைய பேர் மஞ்ச சேலை, ரோஜா நிற சேலையில் இரண்டுகிளுகிளுப்பு பாட்டு ,கதைக்கு சம்பந்தமே இல்லாத காமெடி ட்ராக் இந்தவகையாறாவில் ஒரு படம் இயக்கச் சொன்னார்கள். ஆனால் நான் என்னை சமரசம் செய்துகொள்ளவில்லை. என் அலுவலகத்தை அடமானம் வைத்துதான் இந்த படத்தின் கதையையேஎழுதினேன்”

“ஹாலிவுட் தரத்தில் படம் இயக்கவேண்டும் என்ற ஒரே எண்ணம்தான் இந்தபடத்தை நான் ஒரு பாட்டு கூட இல்லாமல் இயக்க முக்கிய தூண்டுகோலாய் இருந்தது.நான் இந்த படத்தை எனக்கான சுய பரிசோதனை முயற்சியாகத்தான் எடுத்துகொண்டேன். இந்த படத்தில் ஒரு காதல் சீன் வைக்க கூட இடம் கிடையாது.அதுமட்டுமில்லாமல் எனக்கு 42 வயதாகிறது; நான் மரத்தை சுற்றிவந்து டூயட்எல்லாம் பாட முடியாது. அதனால் படத்தில் டூயட் இல்லை. குத்துப் பாட்டுவைப்பது நாகரீகமாகப்படவில்லை.”

“இந்த படத்திலும் குத்து பாட்டில்லை என்றால் பெட்டி வாங்க மாட்டோம் எனசொல்லிவிட்டார்கள். இந்த படத்தை விநியோகஸ்தர்களுக்கு நான் நந்தலாலாதந்தஅனுபவத்தால் போட்டு காட்டவில்லை. ஆனால் அதையும் மீறி ரிலீஸ் ஆனதுபத்திரிகையாளர்களின் நேர்மையான பாராட்டுகளால்தான். இந்த கதையில் யாருமேஓநாய் பாத்திரத்தில் நடிக்கமாட்டார்கள் என தெரியும். அதனால்தான் என் கதையைநம்பி நானே களத்தில் இறங்கினேன்.”

இதுவரை 6 படம் செய்திருக்கின்றேன். ஒரு கோடி ரூபாய்க்கு கூட இந்தபடத்தின் சாட்டிலைட்ஸ் உரிமை போகவில்லை. என்னுடைய 6 படங்களையும்பாருங்கள்… ஒரு படத்திலாவது ஏதேனும் ஒரு பெண்ணை மோசமாககாட்டியிருக்கிறேனா? வயது குறைந்த இளைஞர்கள், வயதானவர்களை கிண்டல் பண்ணும்காட்சி இருந்திருக்கிறதா ? அவ்வளவு கண்ணியமாக படம் எடுத்ததுக்கு எனக்குகிடைத்த பரிசுதான் இது.”

ஒரு கோடி ரூபாய்க்கு கூட சாட்டிலைட்ஸ் உரிமை போகவில்லை. நல்ல படங்களைஎடுக்கவேண்டும் என நினைத்தது தப்பா? 30 லட்ச ருபாய்க்காக நாய் மாதிரிஅலைந்தும் கடன் கிடைக்கவில்லை.முதல் நாள் 30 லட்ச ருபாய் கொடுக்காததால் 10 தியேட்டர்களில் எனது படத்தைஎடுத்துவிட்டார்கள். சரி என நம்பிக்கை இழந்து மீண்டும் தெருவுக்கேவந்துவிடலாம் என எண்ணினேன். ஆனால் அடுத்தநாள் உலகம் முழுவதும் இருந்துபாராட்டுக்கள் குவிந்தன.

“அந்த ஒரே காரணத்தால்தான் இன்று ஒரு வாரமா ஓடிக்கொண்டு இருக்கிறது.ஆனால் என்னிடம் போஸ்டர் ஓட்டக் கூட காசில்லை. கடன் வாங்கித்தான் இப்போதுஇங்கே வந்திருக்கிறேன். ஃபேஸ்புக், ட்விட்டர்தான் இந்த படத்தைகாப்பாற்றியிருக்கிறது. எனினும் இந்த படத்தை விளம்பரப்படுத்த என்னிடம் காசுஇல்லை. நானே  போஸ்டர் ஒட்டும் வேலையிலும் இறங்கிவிட்டேன்.கோவையை அடுத்து திருச்சியிலும் போஸ்டர் ஒட்டும் பணியில் ஈடுபட போகிறேன்”என்று கூறி அனைவரையும் கலங்க வைத்துள்ளார் மிஷ்கின்.