Home தொழில் நுட்பம் வளைவு திரை கொண்ட புதிய சாம்சங் செல்பேசி! நவம்பரில் அறிமுகம்!

வளைவு திரை கொண்ட புதிய சாம்சங் செல்பேசி! நவம்பரில் அறிமுகம்!

948
0
SHARE
Ad

samsunggalaxycurveddisplay2அக் 9-  பிரபல செல்பேசி தயாரிப்பான சாம்சங் வளைந்த திரைக் கொண்ட புதிய  திறன்பேசி ஒன்றை வரும் நவம்பர் மாதம் வெளியிடவுள்ளது. வளைந்த திரைக் கொண்ட இச்செல்பேசி மற்ற செல்பேசிகளை விட சற்று வித்தியசமாகவும் மக்களை கவரக்கூடிய வடிவிலும் தயாரிக்கப்பட்டுள்ளது.

சில புதிய அம்சங்களை கொண்டுள்ள இச்செல்பேசியில் செங்குத்து அச்சில் சற்று வளைவு கொண்டிருப்பினும் சமீபத்தில் வெளியிடப்பட்ட  கேலக்ஸி 3 போன்ற அளவிலேயே உள்ளது.

இதற்கு கேலக்ஸி வட்டம் (Galaxy Round) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இந்த கேலக்ஸி வட்டம் (Galaxy Round) 7.9 மி.மீ தடிமன் அளவில் 154 கி ராம் எடையைக் கொண்டுள்ளது. இது முன்னதாக வெளியிடப்பட்ட சாம்சங் நோட் 3 காட்டிலும் மெல்லிய எடைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது