மணிலா, அக் 16- பிலிப்பைன்ஸ் நாட்டில் சுற்றுலா தளமாக விளங்கும் சிபு மாநிலத்தில் நேற்று காலை 5.43 மணி அளவில் பலத்த நில நடுக்கம் ஏற்பட்டது.
இந்த நில நடுக்கத்தில் கிட்டத்தட்ட 99 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளனர்.
நில நடுக்கம் ஏற்பட்ட போது வீடுகளும் கட்டடங்களும் கடுமையாக குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.
நில நடுக்கத்தில் போகான் தீவு கடும் சேதம் அடைந்த்து. வீடுகளும் கட்டடங்களும் இடிந்தன. இடுபாடுகளில் சிக்கியவர்கள் பலியானார்கள்.
இங்குள்ள தேவாலயமும் பல புராதன சின்ன கட்டடங்களும் இடிந்தன. சிபு அருகே உள்ள மீன் பிடி துறைமுகமும் முற்றாக அழிந்த்து.
நிலநடுக்கத்தின் காரணத்தினால் இப்பகுதியில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து சேவையும் தடை செய்யப்பட்டுள்ளது.