Home கலை உலகம் நடிகை பாவனா திருமணத்திற்கு தயார் !

நடிகை பாவனா திருமணத்திற்கு தயார் !

721
0
SHARE
Ad

Bhavana_Mal_Actress

அக் 17- நடிகை பாவனாவுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளது. இவருக்கு 27 வயது ஆகிறது. எனவே திருமணத்துக்கு தயாராகிறார். இதுகுறித்து பாவனா கூறியதாவது:–

எனக்கு இந்த வருடம் இறுதியில் அல்லது அடுத்த வருடம் திருமணம் நடக்கும். எப்போது நடக்கும் என்பதை குறிப்பிட்டு சொல்ல முடியாது. திருமணம் என்பது வாழ்க்கையில் முக்கிய நிகழ்வு. வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து வரக்கூடியது. எனவே இதில் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க முடியாது. எனவே திருமணத்தை எச்சரிக்கை உணர்வோடு அணுகுவேன்.

#TamilSchoolmychoice

என் நண்பர்கள் எல்லோருக்கும் திருமணம் முடிந்துவிட்டது. இந்திப்பட உலகில் நான் இருந்தபோது யாருமே என்னிடம் உங்களுக்கு எப்போது திருமணம் என்று கேட்டது இல்லை. என் வயதுள்ள பலர் அங்கு முன்னணி நடிகைகளாக உள்ளனர். 30 வயதுள்ள நடிகைகள் கூட அங்கு திருமணம் பற்றி சிந்திப்பது இல்லை. எனக்கு நல்ல மாப்பிள்ளை அமைந்தால் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன் என்று நடிகை பாவனா கூறினார்.