அக்டோபர் 19 – உலகெங்கும் பல நாடுகளில் இந்தியர்கள் குடியேறியிருந்தாலும், அமெரிக்காவில் மட்டும் தொழில் ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் ஒரு பலம் வாய்ந்த சமூகமாகத் திகழ்ந்து வருகின்றார்கள்.
தற்போது, அரசியல் களங்களிலும் பல முனைகளிலும் தீவிரமாக ஈடுபட்டு முன்னேறி வருகின்றனர். இன்றைக்கு ஒரு மாநிலத்தின் அதிபராகவே இந்தியர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். போபி ஜிண்டால் என்பவர்தான் அவர். எதிர்காலத்தில் அமெரிக்க அதிபர் பதவிக்குக் கூட போட்டியிடுவார் என்ற அளவுக்கு அவர் பிரபலமாக இருக்கின்றார்.
இதற்கிடையில்,இந்திய வம்சாவளியைச் சார்ந்த நிஷா தேசாய்பிஸ்வால் என்ற பெண்மணியை தற்போது தெற்கு மற்றும் மத்திய ஆசிய வட்டாரத்திற்கான அமெரிக்காவின்துணை அமைச்சராக நியமித்திருக்கின்றார்.
கடந்த ஜூலை மாதம் அதிபர் ஒபாமா நிஷாவை பரிந்துரை செய்திருந்தார்.
இப்பரிந்துரை தொடர்பாக அமெரிக்க செனட் சபை வெளியுறவுக் குழுவில் விவாதித்து ஆளும்மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் நிஷா தேசாய் பிஸ்வாலுக்கு ஆதரவுதெரிவித்துள்ளனர். இந்நிலையில், நிஷா தேசாய் விரைவில் அமெரிக்காவில்துணை அமைச்சராக பதவியேற்பார் எனத் தெரிகிறது.