Home இந்தியா சஞ்சய் தத்தின் தண்டனை குறைப்பு? மகாராஷ்டிரா அரசிடம் கருத்து கேட்பு

சஞ்சய் தத்தின் தண்டனை குறைப்பு? மகாராஷ்டிரா அரசிடம் கருத்து கேட்பு

465
0
SHARE
Ad

Tamil-Daily-News_23165094853

புதுடில்லி,அக் 24- மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், சிறை தண்டனை அனுபவித்து வரும், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் தண்டனை காலத்தை குறைப்பது குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம், மகாராஷ்டிரா அரசிடம் கருத்து கேட்டுள்ளது.

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், பாலிவுட் நடிகருக்கு, சுப்ரீம் கோர்ட், ஐந்தாண்டு சிறை தண்டனை வழங்கியது. தண்டனையை மறுபரிசீலனை செய்யக்கோரி, சஞ்சய் தத் தாக்கல் செய்த அப்பீல் மனுவை, சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.

#TamilSchoolmychoice

இந்திய பத்திரிகை கவுன்சிலின் தலைவர், மார்க்கண்டேய கட்ஜு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பிய மனுவில், ‘சஞ்சய் தத் மற்றும் இரண்டு பேருக்கு, மனிதாபிமான அடிப்படையில் விடுதலைஅளிக்க வேண்டும்’ என, கோரிக்கை வைத்தார்.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம், நடிகர் சஞ்சய் தத்திற்கு தண்டனை காலத்தை குறைப்பது பற்றி, கருத்து தெரிவிக்கும்படி, மகாராஷ்டிரா மாநில அரசை கேட்டுள்ளது. மகாராஷ்டிரா அரசு பரிந்துரை அளித்த பின், உள்துறை அமைச்சகம், ஜனாதிபதிக்கு அறிக்கை அளிக்கும்.