Home நாடு உடல் எடை குறைக்க !

உடல் எடை குறைக்க !

694
0
SHARE
Ad

Why-women-lose-weight-slower-than-men

அக் 28- உடல் எடையை குறைக்க மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று அவர் கொடுக்கும் மருந்து மாத்திரைகள் தான் சாப்பிட வேண்டும் என்று இல்லை. வீட்டிலேயே இருந்து சில எளிய உணவு பொருட்களை உண்பதன் மூலம் உடல் எடையை சுலபமாக கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.

* வெண்ணெய் இன்சுலின் செயல்பாடுகளை மேம்படுத்துகின்றது எனவே இதை குறைத்து கொள்வது நல்லது.

#TamilSchoolmychoice

* ஆலிவ் எண்ணெய் உடலில் உள்ள பழுப்பு கொழுப்புகளை கரைக்கிறது.

* மாட்டிறைச்சியில் எல்டிஎல் கொழுப்பு அதிகம் உள்ளது எனவே இதை தவிர்ப்பது நல்லது.

* ஒரு நாளைக்கு 10 குவளை தண்ணீர் கண்டிப்பாக அருந்த வேண்டும்.

* எக்காரணத்திற்காகவும் காலை உணவை தவிர்க்க வேண்டாம், அவ்வாறு தவிர்ப்பதால் நாள் முழுவதும் களைப்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி அடுத்த வேலைக்கு அதிகம் சாப்பிட வேண்டியிருக்கும்.

* பழங்கள் மற்றும் காய்கறிகள் எட்டு பகுதிகளாக பிரித்து எடுத்துக் கொள்ளலாம்.

* பாதாம் பருப்பு நாளொன்றுக்கு 7 -10 வரை எடுத்து கொள்ளலாம். இது உடல் எடையை சரியான விகிதத்தில் வைக்க உதவுகிறது.

* கீரைகளில் அதிகப்படியான சத்துகள் உள்ளன. எனவே, தினம் ஒரு கீரை எடுத்து கொள்ளலாம்.

* கீரின் டி (Green Tea) உடல் எடையை குறைக்கும்.

* பெரும்பாலான மக்கள் பொரித்த உணவு பொருட்களை அதிகம் விரும்புவார்கள் எனவே அதை குறைத்து கொண்டால் உடலில் தேவையற்ற கொழுப்பை தவிர்க்கலாம்.

* தாணியங்கள் அதிகமாக எடுத்து கொள்ளலாம்.

* காலையில் வெறும் வயிற்றில் முள்ளங்கி (கேரட்) சாறுடன் தேனைக் கலந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

* அரிசி மற்றும் கிழங்கு பொருட்களில் மாவு சத்து அதிகம் என்பதால் அவற்றை அதிகம் உட்கொள்ளாமல் கோதுமை, ஓட்ஸ், பாஸ்தா போன்ற உணவுகளைச் சேர்த்துக் கொள்ளலாம்.

* சாப்பிட்ட பின் உறங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

இந்த வழிமுறைகளை தினமும் பின்பற்றினாலே உடல் எடை பாதி குறைந்து விடும்.