Home உலகம் மொரீஷியஸ் நாட்டில் புலம் பெயர் தமிழர் மாநாடு

மொரீஷியஸ் நாட்டில் புலம் பெயர் தமிழர் மாநாடு

904
0
SHARE
Ad

C18B21-PortLouisTemple

போர்ட் லுாயிஸ், அக் 28- புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் அனைத்துலக மாநாடு மொரீஷியஸ் நாட்டில் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 16ம் தேதி துவங்குகிறது.இந்த மாநாட்டை சென்னையில் உள்ள ஆசியவியல் நிறுவனம், மொரீஷியஸ் நாட்டின் மகாத்மா காந்தி கல்வி நிறுவனம், மற்றும் பல்வேறு தமிழமைப்புகள் இணைந்து நடத்துகின்றன.

இது குறித்து மொரீஷியஸ் நாட்டின் முன்னாள் கல்வி அமைச்சரும், உலக வங்கியின் மூத்த ஆலோசகரும், யுனெஸ்கோ இயக்குனருமான ஆறுமுகம் பரசுராமன் கூறியதாவது, “உலகில் உள்ள 60க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். தற்போது கல்வி, வேலைவாய்ப்பு, ஆய்வு, வணிகம் போன்ற காரணங்களுக்காக தமிழர்கள் புலம்பெயர்ந்து வருகின்றனர்.பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழர்களின் வாழ்வியல் நிலை, பண்பாட்டுக்கூறுகள் ஆகியவை குறித்து விவாதிக்கும் நோக்கிலும், தமிழோடு அவர்களுக்கு உள்ள தொடர்பு துண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்ற நோக்கிலும் இந்த மாநாடு நடத்தப்படுகிறது” என்றார்.

#TamilSchoolmychoice

மூன்று நாட்கள் நடக்கும் மாநாட்டில், 50க்கும் மேற்பட்ட நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பங்கேற்க உள்ளனர். உலக அளவில் முதன்முறையாக இந்த மாநாடு நடத்தப்படுகிறது என மேலும் அவர் தெரிவித்தார்.