Home அரசியல் சீன மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பேன்! அவர்களுக்கு உதவுவேன்! – முக்ரிஸ் சூளுரை

சீன மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பேன்! அவர்களுக்கு உதவுவேன்! – முக்ரிஸ் சூளுரை

570
0
SHARE
Ad

mukrizகெடா, அக் 29 – சுங்கை லிமாவ் இடைத்தேர்தல் குறித்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய கெடா மந்திரி பெசார் முக்ரிஸ் மகாதீர், அங்கு வாழும் சீன சமூகத்தினருக்கு பல வகைகளில் உதவிகளை செய்யப்போவதாக உறுதியளித்துள்ளார்.

13 வது பொதுத்தேர்தலில் தேசிய முன்னணிக்கு ஆதரவளிக்காத சீன சமுதாயத்தினரின் பள்ளிகளுக்கு, தான் ஒருபோதும் உதவப்போவதில்லை என்று கூறிய அதே முக்ரிஸ் தான் தற்போது சீன மக்களின் நலனுக்காக பல வாக்குறுதிகள் அளித்துவருகிறார்.

நேற்று இரவு சுங்கை லிமாவ் டாலாம் பகுதியிலுள்ள மசீச இடைத்தேர்தல் நடவடிக்கை மையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முக்ரிஸ், “எனது சமீபத்திய அறிக்கை சீன சமூதாயத்தினரிடம் நல்ல வரவேற்பைப் பெறவில்லை என்று தெரியும். ஆனால் அதை யாரும் பொருட்படுத்த வேண்டாம். சீன சமுதாயத்தினர் பல கோரிக்கைகளை வைத்துள்ளனர். அவற்றை எல்லாம் நிறைவேற்றுவேன்” என்று உறுதியளித்தார்.

#TamilSchoolmychoice

மேலும், “வரும் நவம்பர் 4 ஆம் தேதி நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் வாக்களிக்கச் செல்லும் முன், உங்கள் எதிர்கால சந்ததியினரைப் பற்றி கொஞ்சம் சிந்தித்து விட்டு வாக்களியுங்கள். ஏனென்றால் அன்றைய நிகழ்வு மிக முக்கியமானது” என்று அங்கிருந்த சீன மக்களிடம் தெரிவித்தார்.