Home அரசியல் பெர்சே இணைத்தலைவர் டத்தோ அம்பிகாவின் குடியுரிமையை பறிக்க அரசியலமைப்புச் சட்டத்தை திருத்த வேண்டும் –மகாதீர்...

பெர்சே இணைத்தலைவர் டத்தோ அம்பிகாவின் குடியுரிமையை பறிக்க அரசியலமைப்புச் சட்டத்தை திருத்த வேண்டும் –மகாதீர் கருத்து

704
0
SHARE
Ad

images

கோலாலம்பூர், பிப்.10- அரசாங்கத்தை எதிர்க்கும் பெர்சே இணைத்தலைவர் டத்தோ எஸ்.அம்பிகா போன்ற வழக்கறிஞர்களின் குடியுரிமையைப் பறிக்கும் வகையில் அரசியல் சட்டத்தை  திருத்த வேண்டும் என்று துன் மகாதீர் கருத்துரைத்துள்ளார்.

அவ்வாறு அரசியல் திட்டத்தை திருத்த வேண்டுமானால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற வேண்டும் என்றார் அவர். அதற்காக மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை  பெறும் அளவுக்கான வெற்றியை தேசிய முன்னணிக்கு வழங்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

#TamilSchoolmychoice

அரசாங்கத்தை எதிர்த்தும் அரசியலமைப்புப் பற்றி கேள்வி எழுப்புவதுமாக உள்ள வழக்கறிஞர் மன்றத் தலைவர்கள், அம்பிகா போன்றோரின் குடியுரிமையைப் பறிப்பது எப்படி என்று கேட்டதற்கு துன் மகாதீர் இவ்வாறு பதிலளித்தார்.