Home நாடு சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்கள்: கோலாலம்பூர் தெருக்கள் வெறிச்சோடின; நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல்!

சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்கள்: கோலாலம்பூர் தெருக்கள் வெறிச்சோடின; நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல்!

780
0
SHARE
Ad

Malaysian-highway-feature

பிப்ரவரி 10 – சீனப்புத்தாண்டை நாடு முழுமையிலும் சீனர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடத் தொடங்கிய வேளையில், வார இறுதியோடு வரும் நீண்ட விடுமுறையால் இலட்சக்கணக்கான மலேசியர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பத் தொடங்கினர்.

இதனால், நெடுஞ்சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இன்று காலையில் கூட சில முக்கிய நெடுஞ்சாலைகளின் சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்கள் தொடர்வதாக மலேசிய நெடுஞாலைத் துறை வாரியம் அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

ஆனால் அதே வேளையில், எப்போதும் போக்குவரத்து நெரிசல்களில் சிக்கித் தவிக்கும் கோலாலம்பூரின் தெருக்கள் வெறிச்சோடிக் கிடந்தன.

அலுவலகங்கள் மூடப்பட்டிருப்பதாலும், நகரவாசிகள் வெளியூர் சென்று விட்டதாலும், கோலாலம்பூர் தெருக்களில் கார்கள் மிகக் குறைந்த அளவிலேயே காணப்பட்டன.

வடக்கு நோக்கி செல்லும் நெடுஞ்சாலை, தெற்கு நோக்கி செல்லும் நெடுஞ்சாலை ஆகியவற்றோடு கிழக்கு மாநிலங்களுக்கான நெடுஞ்சாலையிலும் போக்குவரத்து நெரிசலால் கார்கள் மெதுவாகவே பயணம் செய்ய முடிந்தது.

பொதுப் போக்குவரத்து நிலையங்களிலும் நெரிசல்கள் ஏற்பட்டன. பலர், பேருந்து, ரயில் போன்ற வாகனங்கள் மூலம்  சொந்த ஊர்களுக்கு திரும்புவதால், பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கான பயணச் சீட்டுகள் அனைத்தும் விற்று முடிந்தன.

செவ்வாய்க்கிழமையோடு விடுமுறை முடிவதால்  அன்றைய தினத்தில் நெடுஞ்சாலைகளில் மீண்டும் கடுமையான போக்குவரத்து நெரிஞ்சல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.