கோலாலம்பூர், பிப்.10- பெர்சே அமைப்பின் இணைத்தலைவர் டத்தோ அம்பிகா, வழக்கறிஞர் மன்றத் தலைவர்கள் குடியுரிமையை ரத்து செய்யும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீரின் கூறியதை திரும்ப பெற வேண்டும் என்று பெர்சே கேட்டுக் கொண்டுள்ளது.
நியாயமான முறையில் தேர்தல் உள்ளிட்டவை நடக்க வேண்டும் நாட்டு மக்களின் நலனுக்காக பெர்சே போராடி வருகிறது.
பத்திரிக்கையாளர் கூட்டமொன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு துன் மகாதீரின் பதில் ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும் அதனால் அவர் வழக்கறிஞர் மன்றத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பெர்சே வழிநடத்தும் குழு உறுப்பினர் மரியா சின் பிரி மலேசியா இணையப் பத்திரிக்கையிடம் கூறினார்.
பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள வேளையில் பெர்சே அமைப்பை அரசியல் சதுரங்ககக் காய்களாக பயன்ப்படுத்த வேண்டாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.