Home கலை உலகம் எளிய முறையில் 59வது பிறந்த நாளை கொண்டாடிய நடிகர் கமல்

எளிய முறையில் 59வது பிறந்த நாளை கொண்டாடிய நடிகர் கமல்

705
0
SHARE
Ad

1456732_587831587933371_2095929726_n

சென்னை, நவம்பர் 9- உலக நாயகன் கமலஹாசன் தனது 59வது பிறந்த நாளை எப்போதும்போல மிக எளிமையாக கொண்டாடினார். வழக்கம்போல காலையில் எழுந்து பெற்றோர்கள் படத்தை வணங்கிவிட்டு ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் ரசிகர்களை சந்தித்து அவர்களின் வாழ்த்தை பெற்றுக் கொண்டார். அவரின் 59 வது பிறந்தநாள் விழாவில் மலேசிய ரசிகர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடதக்கது.

தனது பிறந்தநாளின் போது பத்ம ஸ்ரீ கமல்ஹாசன் பட்டுவேட்டி ஜிப்பாவில் மிக அழகாகவும் இளமையாகவும் காட்சியளித்தார். ரசிகர் மன்ற பொறுப்பாளர் தங்கவேலு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

#TamilSchoolmychoice

கால் ஊனமுற்ற பெண்ணுக்கு மூன்று சக்கர மிதிவண்டி, ஏழைகளுக்கு தையல் எந்திரம் உள்ளிட்ட தொழில் கருவிகளை வழங்கினார். ஆதரவற்றோர் இல்லங்களுக்கும் உதவிகளை வழங்கினார். பின்னர் அனைவரிடமும் விடைபெற்று விஸ்வரூபம் 2 வின் பணிகளை கவனிக்கச் சென்று விட்டார்.