ஜெனிவா, நவ.13- உலகின் அரிய வகை வைரங்களுள் ஒன்றாக கருதப்படும் பெரிய அளவிலான ஆரஞ்சு நிற வைரம் இன்று ஜெனிவாவில் ஏலம் விடப்படுகிறது.
நெருப்பு வைரம் என்ற வகையை சேர்ந்த இந்த வைரத்திற்கு ‘ஆரஞ்சு வைரம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அரிய வைரங்களுள் ஒன்றாக கருதப்படும் இது தென் ஆப்பிரிக்காவில் கண்டுக்கப்பட்டது. இதன் எடை 14.8 கேரட் ஆகும்.
14 கேரட் எடையை தாண்டிய வைரங்கள் கிடைப்பது அரிது என்பதால் இந்த ஆரஞ்சு வைரம் தனது விலை மதிப்பை நிர்ணயித்துக் கொள்வதற்காக உலகையே ஒரு சுற்று சுற்றிவந்து, நிபுணர்களின் சான்றுடன் மீண்டும் ஜெனிவாவை வந்தடைந்துள்ளது.
இங்குள்ள கிரிஸ்டீஸ் ஏல நிறுவனம் இந்த வைரத்தை இன்று ஏலம் விடுகிறது.
இது 17 மில்லியன் – 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை விலை போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.