Home கலை உலகம் நடிகை சரிகா சுயசரிதை எழுத கமல் எதிர்ப்பு

நடிகை சரிகா சுயசரிதை எழுத கமல் எதிர்ப்பு

906
0
SHARE
Ad

kamalhassa sarika 300-200

சென்னை, நவம்பர் 13 – நடிகை சரிகா சுயசரிதை எழுதி வெளியிடுவதற்கு அனுமதி மறுத்துள்ளார் கமல்ஹாசன்.

கமல், ரஜினியின் திரையுலக வாழ்க்கை பற்றி பல்வேறு புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால், தங்கள் வாழ்க்கை பற்றி இருவருமே சுயசரிதை எழுதியதில்லை. கமலிடம் இருந்து பிரிந்து மும்பையில் தனிமையில் வாழ்கிறார் அவரது மனைவி சரிகா. மகள்கள் ஸ்ருதி, அக்ஷரா தனித்தனி வீடுகளில் வசிக்கின்றனர். இந்நிலையில் சரிகாவிடம் சுயசரிதை புத்தகம் எழுதும்படி பதிப்பகத்தார் சிலர் அணுகினர். அதற்கு அவரும் சம்மதம் தெரிவிக்கும் வகையில் பேசி வருகிறார்.

#TamilSchoolmychoice

இதையறிந்த கமல், சரிகா சுயசரிதை எழுதுவதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார். கமலுடைய சினிமா வாழ்க்கை சாதனை நிறைந்ததாக இருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்னைகள் இருப்பதால் அதை வெளியுலகுக்கு தெரிவிக்க அவர் விரும்பவில்லையாம்.

இந்த விவகாரங்களால் மகள்களின் வாழ்க்கை பாதிக்கபடக்கூடும். எனவே இதற்கு அனுமதி தர முடியாது என்று சரிகாவுக்கு கமல் தரப்பிலிருந்து மறுப்பும், எதிர்ப்பும் வந்திருக்கிறதாம். இதனால் சுயசரிதை எழுதும் திட்டத்தை சரிகா கைவிடுவாரா அல்லது எழுதுவாரா என்பது விரைவில் தெரிந்துவிடும் என்கிறார்கள் சரிகாவுக்கு நெருங்கியவர்கள்.