Home 13வது பொதுத் தேர்தல் பேராளர்களை மிரட்டியோ, பண அரசியல் செய்தோ பணிய வைக்க முடியாது – சரவணன் கருத்து

பேராளர்களை மிரட்டியோ, பண அரசியல் செய்தோ பணிய வைக்க முடியாது – சரவணன் கருத்து

665
0
SHARE
Ad

m.saravanan1-may7கோலாலம்பூர், நவ 14 – ம.இ.கா பேராளர்களை பண அரசியல் செய்தோ அல்லது மிரட்டல் விடுத்தோ கட்சித் தேர்தலில் வாக்களிக்க வைக்க முடியாது.

காரணம் அவர்கள் அனைவரும் முதிர்ச்சி பெற்றவர்கள். அவர்கள் தேசிய உதவித் தலைவர்கள் மற்றும் மத்திய செயலவை என பல்வேறு பதவிகளுக்குப் போட்டியிடும் தலைவர்களைச் சுயசிந்தனையின் மூலமாகத் தான் தேர்ந்தெடுப்பார்கள் என்று ம.இ.கா வின் நடப்பு உதவித் தலைவரான டத்தோ எம்.சரவணன் தெரிவித்தார்.

ம.இ.கா தலைமையகத்தில் நேற்று நடந்த நாம் அறவாரிய இயக்கத்தின் அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சரவணன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்தத் தேர்தலில் ம.இ.கா பேராளர்கள் சரியான தலைவர்களைத் தான் தேர்வு செய்வார்கள். பண அரசியலிலோ அல்லது மிரட்டல்களுக்குப் பயந்தோ தலைவர்களைத் தேர்ந்தெடுத்து கட்சிக்கு அழிவை உண்டுபண்ண மாட்டார்கள்” என்று குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice