கோலாலம்பூர், நவ 18 – ஆறு மாத இடைநீக்க காலம் முடிந்து மீண்டும் வருவேன். தொடர்ந்து மக்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன் என்று பிகேஆர் உதவித் தலைவரும், பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினருமான என்.சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
தடுப்புக்காவல் மரணங்கள், சிவப்பு அடையாள அட்டை போன்ற விவகாரங்களை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் எழுப்பி அதற்கான தீர்மானங்களை கொண்டு வருவேன் என்றும் சுரேந்திரன் கூறியுள்ளார்.
கடந்த வாரம் செவ்வாய்கிழமை, ஜாலான் பி ரம்லி ஸ்ரீ முனீஸ்வரர் காளியம்மன் ஆலய விவகாரத்தில், மக்களவையில் கொண்டுவரப்பட்ட அவசர தீர்மானத்திற்கு எதிராக சுரேந்திரன் கருத்துத் தெரிவித்தார்.
நாடாளுமன்றம் ஜனநாயகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.
இதனால் ஆறு மாதங்களுக்கு மக்களவையில் இருந்து இடைநீக்கம் செய்வதாக, சுரேந்திரனுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.