Home கலை உலகம் கோச்சடையான்’ படத்தால் விஜயின் ‘ஜில்லா’விற்கு சிக்கல்?

கோச்சடையான்’ படத்தால் விஜயின் ‘ஜில்லா’விற்கு சிக்கல்?

502
0
SHARE
Ad

kochadaiyaan-poster_350_040213041048

சென்னை, நவம்பர் 19- பெரும் பிரச்னைகளுக்கு பின் விஜய் நடித்த ‘தலைவா’ படம் வெளியானது. ஆனாலும், படத்திற்கு பெரிய அளவு வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால், தான் அடுத்து நடிக்கும் ‘ஜில்லா’ படத்தின் மூலம் இழப்புகளை சரி செய்துவிடலாம் என நினைத்திருந்தார் விஜய்.

இந்த படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இந்நிலையில், ரஜினி நடித்துள்ள ‘கோச்சடையான்’ படமும் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பரில் ஆடியோ விழா நடத்திவிட்டு வருகிற பொங்கலுக்கு ‘கோச்சடையான்’ படத்தை வெளியிட  உறுதி செய்துள்ளனர்.

#TamilSchoolmychoice

அதுவும், ஜனவரி 10ம் தேதியே படம் திரையரங்குகளில் வருகிறது. இதன் காரணமாக விஜயின்  ‘ஜில்லா’ படத்தை பொங்கலுக்கு வெளியிட அறிவித்திருந்த நிறுவனங்கள் அதிர்ச்சியடைந்து உள்ளன. அஜீத்தின் ‘வீரம்’ படத்திற்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

திரையரங்கு பிரச்னை வசூல் போன்றவை பாதிக்கப்படும் என்பதால் படம் வெளியாகும் தேதி குறித்து ஆலோசித்து வருகின்றனர்.