Home இந்தியா அப்துல் கலாம் தவறி விழுந்ததால் தலையில் அடிபட்டது: உடல் நிலை தேறுகிறது

அப்துல் கலாம் தவறி விழுந்ததால் தலையில் அடிபட்டது: உடல் நிலை தேறுகிறது

492
0
SHARE
Ad

6d5ac961-df3c-498f-ac90-7635fd3677c6_S_secvpf

புதுடெல்லி, நவம்பர் 19 – முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பதவியில் இருந்து ஓய்வு பெற்றதும் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மாணவ – மாணவிகளை சந்தித்து கலந்துரையாடி வருகிறார். இவர் டெல்லியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை அவர் திடீர் என்று வீட்டில் மயங்கி விழுந்தார். உடனே அவர் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கீழே தவறி விழுந்ததில் அவரது தலையின் நெற்றிப் பகுதியில் காயம் ஏற்பட்டது. மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். தற்போது அவர் குணம் அடைந்து வருவதாகவும் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.