Home நாடு ரோஸ்மா கத்தார் பயணத்திற்கு அமைச்சர்கள் நன்றி!

ரோஸ்மா கத்தார் பயணத்திற்கு அமைச்சர்கள் நன்றி!

460
0
SHARE
Ad

SHAHIDANகோலாலம்பூர், நவ 19 – அண்மையில் கத்தார் நாட்டில் நடந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்டதற்காக பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சோருக்கு, அமைச்சரவையில் பெரும்பான்மையானவர்கள் நன்றி தெரிவித்துள்ளதாக பிரதமர் துறை அமைச்சர் சாஹிடன் காசிம் தெரிவித்தார்.

இன்று நாடாளுமன்றத்திற்கு வெளியே இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சாஹிடன், “இந்த விவகாரத்தில் பொய் சொல்பவர்கள் மீது கடவுள் தனது கோபத்தைக் காட்டி அவர்கள் தங்கள் தவறுகளை உணரச் செய்வார். அரசாங்கத்தின் செலவில், ரோஸ்மா தனி விமானத்தில் சென்று வந்த பயணத்தால் நாட்டிற்கு நன்மை தான்” என்றும் சாஹிடன் குறிப்பிட்டார்.

ரோஸ்மா மன்சோர், வெளிநாட்டுப் பயணங்களுக்கு உயர் ரக தனி விமானங்களைப் பயன்படுத்துவது குறித்து  நாடாளுமன்றத்தில் நேற்று கடும் விவாதம் நடைபெற்றது.

#TamilSchoolmychoice

பக்காத்தானைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்மின் அலி, பிரதமரின் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளுக்கு எதற்காக ரோஸ்மா பங்கேற்கிறார் என்று கேள்வி எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.