Home அரசியல் இப்ராகிம் அலிக்கு 1 நாள் சிறை தண்டனை – உயர்நீதிமன்றம் தீர்ப்பு

இப்ராகிம் அலிக்கு 1 நாள் சிறை தண்டனை – உயர்நீதிமன்றம் தீர்ப்பு

650
0
SHARE
Ad

ibrahim-aliகோலாலம்பூர், நவ 19 – கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக பெர்காசா தலைவர் இப்ராகிம் அலிக்கு ஒருநாள் சிறை தண்டனையும், 20,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

பெர்காசா இணையத்தளத்தில் கடந்த ஜனவரி 7 ஆம் தேதி, வலைத்தளப் பதிவாளர் ஸைனுதீன் சாலேவால் எழுதப்பட்ட ஒரு கட்டுரையில் உயர்நீதிமன்ற நீதிபதி வி.டி.சிங்கத்தின் நேர்மை குறித்து விமர்சிக்கப்பட்டிருந்தது.

எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், உத்துசான் மலேசியா நிறுவனத்தின் மீதும், அந்தப் பத்திரிக்கையின் தலைமை ஆசிரியர் அப்துல் அஜிஸ் இஷாக் மீதும் தொடுத்த அவதூறு வழக்கை விசாரணை செய்த வி.டி.சிங்கத்தின் நேர்மை குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

#TamilSchoolmychoice

நீதிபதியின் பாலியல் சார்புநிலை குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

இதனால் அந்தக் கட்டுரையை எழுதிய ஸைனுதீனுக்கு  நான்கு வார சிறை தண்டனை வழங்கப்பட்டது. அதே நேரத்தில் அந்த கட்டுரை பெர்காசா இணையத்தளத்தில் வெளியிட அனுமதி வழங்கியதற்காக இப்ராகிம் அலிக்கு ஒருநாள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

தீர்ப்பைக் கேட்ட இப்ராகிம் அலி தலையை ஆட்டியவாறு காணப்பட்டார். பின்னர் கையில் விலங்கிடப்பட்டு சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இன்று மாலை 5 மணிவரை தடுத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.