Home இந்தியா பிரசாரத்துக்கு என் பெயரை பயன்படுத்தக்கூடாது: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அன்னாஹசாரே எதிர்ப்பு

பிரசாரத்துக்கு என் பெயரை பயன்படுத்தக்கூடாது: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அன்னாஹசாரே எதிர்ப்பு

611
0
SHARE
Ad

796fde99-f751-4eb5-9bf4-de18f6e28b6e_S_secvpf

புதுடெல்லி, நவ 19– டெல்லி மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் (டிசம்பர்) 4–ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆகிய மூன்று கட்சிகளிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

ஊழலை ஒழிக்க லோக் பால் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடத்தி புகழ் பெற்ற பிரபல சமூக சேவகர் அன்னா ஹசாரேயிடம் அரவிந்த் கெஜ்ரிவால் சேர்ந்திருந்தார். பிறகு அவர் அன்னா ஹசாரேயிடம் இருந்து பிரிந்து ஆம்ஆத்மி கட்சியை தொடங்கினார்.

#TamilSchoolmychoice

டெல்லி சட்டசபை தேர்தலில் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, பா.ஜ.க.வுக்கு அடுத்தப்படியாக அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று கருத்து கணிப்புகளில் தெரிய வந்துள்ளது. கெஜ்ரிவால் முதல்வராக டெல்லி மாநில மக்களில் கணிசமானவர்கள் கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி மாநில மக்களை மேலும் கவரும் வகையில் கெஜ்ரிவால் நேற்று தேர்தல் அறிக்கை வெளியிட திட்டமிட்டிருந்தார். ஆனால் திடீரென அவருக்கும் அன்னா ஹாரேக்கும் மோதல் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி சட்ட சபையில் வரும் 29–ந்தேதி அன்னாவின் ஜன் லோக்பால் மசோதா கொண்டு வரப்படும் என்றார். இதற்கு அன்னா ஹசாரே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று ஹசாரே நிருபர்களிடம் கூறியதாவது, “ஜன் லோக்பால் மசோதாவுக்கு என் பெயரை சூட்டியிருப்பதாக கெஜ்ரிவால் கூறியுள்ளார். அதோடு 29–ந்தேதி அந்த மசோதா சட்டசபையில் கொண்டு வரப்படும் என்றும் கூறியுள்ளார்.தேர்தல் பிரசாரத்துக்கு என்னுடைய பெயரை கெஜ்ரிவால் பயன்படுத்த கூடாது. என் பெயரை சேர்த்து பிரசாரம் செய்வது தவறான அணுகுமுறை. இதை நான் பல தடவை சொல்லி விட்டேன்.நாடெங்கும் பொருந்தும் சட்டத்தை ஜன் லோக் பால் மசோதாவை பாராளுமன்றத்தில்தான் கொண்டு வர முடியும். டெல்லி சட்ட சபையில் கொண்டு வந்து என்ன செய்ய முடியும்” என அன்னா ஹசாரே கூறினார்.

ஹசாரே பதிலடியால் கெஜ்ரிவால் அதிர்ச்சி அடைந்தார். இதனால் அவர் இன்று வெளியிடுவதாக இருந்த தேர்தல் அறிக்கை நாளைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.