புதுடில்லி, அக் 16- பெருகிவரும் உழல்களுக்கு எதிராக வலுவான நாடாளுமன்றச் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும் என்று போராடி வரும் அன்னா ஹசாரே புனேவில் உள்ள மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிராஸ்டேட் சுரப்பி எனப்படும் சிருநீர் குழாய் தொடங்கும் இடத்தில் உள்ள சுரப்பியில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்கும் வகையில் அவருக்கு விரைவில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட உள்ளது.
ஏதாவது ஒரு பிரச்சனையை முன்வைத்து 76 வயதாகும் அன்னா ஹசாரே அடிக்கடி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த ஜனவரி மாதம் மார்பகத் தொற்று நோயால் அவதிப்பட்ட அவருக்கு புனேவில் உள்ள மருத்துவமனையில் அனுமத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
தற்போது சிறுநீர் குழாய்க்கு முன்நிற்கும் (புராஸ்டேட்) சுரப்பியில் அடைப்பு ஏற்பட்டு அவதிப்பட்டு வந்த அவர் மீண்டும் புனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்தக்கொதிப்பு நிலை சீரடைந்ததும் விரைவாக அறுவைசிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ளதாகவும், அவரது உடல் நிலை பற்றிக் கவலைப்படும் படியாக ஏதுமில்லை எனவும் ஹசாரேவின் உதவியாளர் தெரிவித்தார்.