Home 13வது பொதுத் தேர்தல் சுவா போட்டியிடுவதாக இருந்தால் நான் போட்டியிடமாட்டேன் – வீ கா சியோங் அறிவிப்பு

சுவா போட்டியிடுவதாக இருந்தால் நான் போட்டியிடமாட்டேன் – வீ கா சியோங் அறிவிப்பு

775
0
SHARE
Ad

wee ko siangகோலாலம்பூர், அக் 16 – மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் தனது பதவியைத் தற்காத்துக் கொள்ள மீண்டும் கட்சித் தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தால், தான் மசீச தேர்தலை முற்றிலும் புறக்கணிக்கப்போவதாக மசீச இளைஞர் பிரிவுத் தலைவர் வீ கா சியோங் அறிவித்துள்ளார்.

“கட்சியின் தலைவர் பதவிக்குத் தான் போட்டியிடப் போவதில்லை என்று கடந்த மே 6 ஆம் தேதி சுவா எடுத்த முடிவில் நிலையாக இருக்க வேண்டும். அப்படி அவர் தனது வார்த்தையில் இருந்து மாறினால் கட்சியின் நேர்மைக்கே பங்கம் வந்துவிடும்” என்றும் வீ கா சியோங் குறிப்பிட்டுள்ளார்.

“ஒருவேளை அவர் தனது முடிவை மாற்றிக்கொண்டால், நான் எந்த ஒரு பதவிக்கும் போட்டியிடமாட்டேன்” என்று வீ இன்று மசீச தலைமையகத்தில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

சுவா தனது முடிவில் நிலையாக இருக்கும் பட்சத்தில்,தான் போட்டியிடுவதாகவும் வீ  அறிவித்தார்.