இந்த நிலை தொடருமானால், பக்காத்தான் கூட்டணியில் தங்களது நிலையை மறுபரிசீலனை செய்ய வேண்டி வரும் என்றும் பாஸ் கட்சியின் துணை ஆணையர் ஃபௌசி யூசோப் கூறியுள்ளார்.
மேலும், மாநில அரசாங்கம் தங்களுக்கு 6 கோரிக்கைகளை புறக்கணிக்குமானால், தங்களது பிரதிநிதிகளை பதவிகளிலிருந்து விலக்கிக் கொள்ளப்போவதாகவும் பாஸ் அறிவித்துள்ளது.
செபாராங் ஜெயாவில் இன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ஃபௌசி, “கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் இவை. அவர்கள் பாஸ் கட்சி பக்காத்தானின் கூட்டணியில் இன்னும் நிலையான இடத்தைப் பிடிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதேநேரத்தில் மாநில அரசாங்கத்தில் வழங்கப்படும் பதவிகள் சமமானதாக இருக்கவேண்டும் என்றும் கருதுகின்றனர். பக்காத்தானின் பொம்மையாக பாஸ் கட்சி இருப்பதை அவர்கள் விரும்பவில்லை” என்று தெரிவித்தார்.
“ஒவ்வொரு நியமனங்களிலும் பாஸ் கட்சிக்கான் இடம் குறித்து எங்களுடன் விவாதிக்கப்பட்டு நாங்கள் ஒப்புக்கொண்ட பின்னரே வழங்கப்பட வேண்டும். அப்படி இல்லையென்றால் அந்த நியமனங்கள் நாங்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பதோடு எங்களை ஓரங்கட்ட நினைப்பவர்களுக்கு எதிராகப் போராடுவோம்” என்றும் ஃபௌசி கூறினார்.