Home உலகம் தென் ஆப்பிரிக்காவில் வணிக வளாக கட்டிடம் இடிந்து 2 பேர் பலி: 29 பேர் காயம்

தென் ஆப்பிரிக்காவில் வணிக வளாக கட்டிடம் இடிந்து 2 பேர் பலி: 29 பேர் காயம்

519
0
SHARE
Ad

d7b3cdcf-ae2d-4030-adab-eea2243bb1f7_S_secvpf

ஜோகன்ஸ்பர்க், நவ 20– தென் ஆப்பிரிக்காவில் கடற்கரை நகரமான டக்டன் அருகே தோங்காட் என்ற இடம் உள்ளது. இங்கு வணிக வளாகத்தில் கட்டுமான பணி நடந்தது. ஆனால் அப்பணி முறைப்படி நகரசபை அனுமதியுடன் கட்டப்படவில்லை. எனவே, கட்டுமான பணி பாதியில் நின்றது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த கட்டிடத்தின் கூரை திடீரென இடிந்து விழுந்தது. அதில், அதன் அடியில் படுத்து உறங்கி கொண்டிருந்தவர்கள் சிக்கி கொண்டனர். தங்களை காப்பாற்றும்படி கூச்சலிட்டனர். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

#TamilSchoolmychoice

காவல் துறையினர், தீயணைப்பு படையினர் உள்ளிட்ட மீட்பு படையினரும் வந்தனர். இருந்தும் இடிபாடுகளுக்குள் சிக்கி 2 பேர் பலியாகினர். 29 பேர் காயம் அடைந்தனர் அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தவிர மேலும் 50 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனவே, ‘கிரேன்’ மூலம் இடிபாடுகள் அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சிக்கி இருப்பவர்களை கண்டுபிடித்து மீட்க மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டன.