கோலாலம்பூர், நவம்பர் 21- பப்பாளி மரத்திலிருந்து எதை உடைத்தாலும் பால் வரும். அதைச் சிறிதளவு சேகரித்து அத்துடன் கொஞ்சம் தண்ணீரையும் சேர்க்கவும். இந்தக் கலவையில் சிறிதளவு சீரகத்தை ஊறப் போடவும்.
இதை கால் மணி நேரம் வைத்திருக்கவும். பின் முகப்பரு எங்கே உள்ளதோ அங்கே இக்கலவையை நன்றாகத் தடவி விடவும். முகப்பருக்கள் மறைந்து, இருந்த சுவடு தெரியாமல் போய்விடும்.
அம்மை வடுக்களை அழிக்க சிறிதளவு கசகசா, சின்னதாக மஞ்சள் துண்டு ஒன்று, கறிவேப்பிலை சிறிதளவு எடுத்து இம்மூன்றையும் மை பதத்திற்கு அரைக்கவும். இந்தக் கலவையை முகத்தில் எங்கே அம்மை வடுக்கள் காணப்படுகின்றனவோ அங்கே நன்றாகத் தடவுங்கள். பின் சில நிமிடங்களுக்கு உலற விடுங்கள்.
பின்னர் பயத்த மாவினால் முகத்தைக் கழுவி விடுங்கள். இப்படியே 3 நாட்களுக்கு ஒரு முறை செய்யுங்கள். அம்மை வடுக்கள் நீங்கி முகம் மினு மினுக்கும்.