Home கலை உலகம் அமிதாப்பச்சனுடன் நடிப்பது பெருமை: தனுஷ்

அமிதாப்பச்சனுடன் நடிப்பது பெருமை: தனுஷ்

465
0
SHARE
Ad

AmitabhBachchanandActorDhanush

சென்னை, நவம்பர் 21- அமிதாப்பச்சனுடன் இணைந்து இந்திப் படமொன்றில் நடிக்கிறார் தனுஷ். இப்படத்தை பால்கி இயக்குகிறார். இளையராஜா இசையமைக்கிறார்.

ஏற்கனவே ‘ராஞ்சனா’ படம் மூலம் இந்தியில் அறிமுகமான தனுசுக்கு இது இரண்டாவது படம். அமிதாப்பச்சனுக்கு இதில் முக்கிய வேடமாம். தனுஷ் தற்போது ‘வேலை இல்லா பட்டதாரி’, ‘அநேகன்’ ஆகிய இரு தமிழ் படங்களில் நடிக்கிறார். இந்த படங்களை முடித்து விட்டு இந்திக்கு போகிறார்.

#TamilSchoolmychoice

தனுஷ் ஜோடியாக நடிக்க கமலஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷரா பெயர் அடிப்படுகிறது. இதுகுறித்து தனுஷ் கூறும் போது, இந்தியில் அடுத்து பால்கி இயக்கும் படத்தில் நடிக்கிறேன். இதில் அமிதாப்பச்சனுடன் இணைந்து நடிப்பது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இளையராஜா இசையமைப்பது மேலும் சந்தோஷத்தை கொடுக்கிறது என்றார்.