Home கலை உலகம் ஜீன்ஸ்-2 படம் மூலம் மீண்டும் வருகிறார் பிரசாந்த்?

ஜீன்ஸ்-2 படம் மூலம் மீண்டும் வருகிறார் பிரசாந்த்?

670
0
SHARE
Ad

20080319-10000-BC-Poster

சென்னை, நவம்பர் 21- கோலிவுட்டில், பில்லா-2, சிங்கம்-2, படங்களையடுத்து கமலின் விஸ்வரூபம்-2 மற்றும் அர்ஜூனின் ஜெய்ஹிந்த் -2 உள்பட ஏற்கனவே வெற்றி பெற்ற மேலும் சில படங்களின் இரண்டாம் பாகங்களும் தற்போது வளர்ந்து வருகின்றன.

இந்தநிலையில், ஷங்கர் இயக்கத்தில் பிரசாந்த் இரட்டை வேடங்களில் நடித்த ஜீன்ஸ் படத்தின் இரண்டாம் பாகமும் தயாராகிறதாம். ஆனால் இந்த தலைப்பை ஷங்கர் தரப்பில் பதிவு செய்யவில்லை. பிரசாந்தின் தந்தையான தியாகராஜன் பதிவு செய்துள்ளாராம்.

#TamilSchoolmychoice

ஏற்கனவே பிரசாந்தை வைத்து மம்பட்டியான், பொன்னர்சங்கர் உள்பட சில படங்களை இயக்கியவர் தியாகராஜன் என்பதால், இந்த ஜீன்ஸ் இரண்டாம் பாகத்தையும் அவரே இயக்குவார் என்று தெரிகிறது. இருப்பினும் அதுபற்றிய உறுதியான தகவல் வெளியிடப்படவில்லை. மேலும், இதன் முதல் பாகத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடித்திருந்தார்.

அதேபோல் நாசர், மனோரமா, செந்தில் என பல பிரபலங்களும் நடித்திருந்ததால், இந்த இரண்டாம் பாகத்திலும் முதல் பாகத்துக்கு இணையான பிரபலங்களை வைத்து பிரமாண்டமாக தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளாராம் தியாகராஜன் .

சமீபகாலமாக சரியான படவாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் பிரசாந்த், இந்த படத்தின் மூலம் விட்ட சந்தர்ப்பத்தை கைப்பற்றும் முயற்சியாக, ஜீன்ஸ் பிரசாந்தை நினைவுபடுத்தும் வகையில் தனது உடல் எடையை குறைத்து வருகிறாராம். இதையடுத்து அவருக்கேற்ற, புதிய ஐஸ்வர்யாராயை தேடும் படலமும் முடுக்கி விடப்பட்டுள்ளதாம்.