Home நாடு “ஆம்புலன்சுக்காக 15 நிமிடம் காத்திருந்தேன்” – டாக்டர் சுப்ரா

“ஆம்புலன்சுக்காக 15 நிமிடம் காத்திருந்தேன்” – டாக்டர் சுப்ரா

522
0
SHARE
Ad

Dr.-S.-Subramaniamமலாக்கா, நவ 22 – விபத்தில் சிக்கி மருத்துவ சிகிச்சை பெற்று வரும் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சுப்ரமணியம், தான் இன்னும் ஓரிரு நாட்களில் மருத்துவமனையில் இருந்து வெளியேறி அன்றாட கடமைகளை ஈடுபடவுள்ளதாக நேற்று மலாக்கா மருத்துவமனையில் பத்திரிக்கையாளர்களிடம் கூறினார்.

கடந்த புதன்கிழமை மலாக்காவில் நடைபெற்ற மஇகா கூட்டமொன்றில் கலந்து கொள்வதற்காக பயணம் செய்து கொண்டிருந்த போது, நெடுஞ்சாலையில் இரவு 8.30 மணியளவில் அமைச்சரின் கார் விபத்திற்குள்ளானது.

சுப்ரா விபத்திற்குள்ளான செய்தியை கேள்விப் பட்ட பல அரசியல் பிரமுகர்கள் மலாக்கா மருத்துவமனையில் முற்றுகையிட்டனர்.நள்ளிரவு 12 மணியளவில் மலாக்கா ஆளுநரும், மலாக்கா முதலமைச்சரும் சுப்ரமணியத்தைக் காண வந்தனர்.

#TamilSchoolmychoice

நேற்று காலை ம.இ.கா வின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலுவும் இதர ம.இ.கா தலைவர்களும் மருத்துவமனையில் வந்து அமைச்சரை நலம் விசாரித்தனர்.

நேற்று மாலை 4.30 மணியளவில் ம.இ.கா உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளரான டத்தோ டி.மோகன் அமைச்சரைச் சந்தித்தார்.

ஆம்புலன்சுக்காக காத்திருந்தேன்

தான் விபத்திற்குள்ளான போது ஆம்புலஸ் வருவதற்காக 15 நிமிடங்கள் காத்திருக்க வேண்டிய நிலை தனக்கு ஏற்பட்டதாக சுப்ரமணியம் தெரிவித்தார்.

நெடுஞ்சாலையில் விபத்து நிகழ்ந்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவிச் சிகிச்சை அளிக்கும் புரோப்பெல் என்ற நெடுஞ்சாலைப் பராமரிப்பு நிறுவனத்துடன் இனி சுகாதார அமைச்சும் ஒத்துழைக்கும் என்று சுப்ரா கூறினார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர முதலுவிச் சிகிச்சைகள் செய்யும் பயிற்சியையும் அமைச்சு அக்குழுவிற்கு வழங்கும் என்றும் சுப்ரா தெரிவித்தார்.