Home இந்தியா வளர்ச்சிக்கு தடையான வறுமை சுவரை காங்கிரஸ் உடைக்கும்

வளர்ச்சிக்கு தடையான வறுமை சுவரை காங்கிரஸ் உடைக்கும்

603
0
SHARE
Ad

M_Id_133798_Rahul_Gandhi

புஷ்கர், நவம்பர் 26- ‘வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் வறுமை என்ற கடினமான சுவரை காங்கிரஸ் உடைக்கும்’ என்று ராகுல் பேசினார். ராஜஸ்தான் மாநிலம், புஷ்கர் நகரில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: நாடு வேகமாக வளர்ச்சி அடைய வேண்டும் என்றால், வறுமையை ஒழிக்க வேண்டியது அவசியமாகும்.

நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் வறுமை என்ற அந்த கடினமான சுவரை காங்கிரஸ் உடைத்து தள்ளும். நாடு வளர்ச்சி அடைய சாலைகள், ரயில்வே பாதைகள், விமான நிலையங்கள் போன்ற உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியமானதாகும். அதே நேரத்தில், அரசிடம் உதவியை எதிர்பார்க்கும் ஏழை மக்களுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது முக்கியம் எனக் கூறினார்.