Home இந்தியா ராகுல்காந்தியை பிரதமர் ஆக்க சோனியா ஆந்திராவை பிரிக்கிறார்: சந்திரபாபு நாயுடு ஆவேசம்

ராகுல்காந்தியை பிரதமர் ஆக்க சோனியா ஆந்திராவை பிரிக்கிறார்: சந்திரபாபு நாயுடு ஆவேசம்

549
0
SHARE
Ad

Chandrababu-Naidu-196

காளஹஸ்தி, நவ 27– ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் ஏற்கனவே புயல் பாதித்த இடங்களை தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பார்வையிட்டார்.

அங்குள்ள 6 மண்டலங்களில் சேதமான விவசாய நிலங்களை சந்திரபாபு நாயுடு பார்வையிட்டார். விவசாயிகளை சந்தித்து சேத விவரங்களை கேட்டறிந்தார்.

#TamilSchoolmychoice

பின்னர் சந்திரபாபு நாயுடு நிருபர்களிடம் கூறியதாவது, “ஆந்திராவில் இயற்கை சீற்றங்களால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் காங்கிரஸ் அரசின் இயலாத தன்மையை காட்டுகிறது. ஆந்திராவில் புயல் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியும் முதல் அமைச்சர் கிரண்குமார் ரெட்டி பொறுப்பு இல்லாமல் இருக்கிறார். புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட அவருக்கு நேரம் இல்லை.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கடன்களை தள்ளுபடி செய்வோம். மதுபானக்கடைகளை மூடுவோம்.

மத்திய அரசு ஏற்படுத்தியுள்ள மாநில பிரிவினை சட்டத்துக்கு எதிரானது. இதற்கு சோனியாதான் காரணம். சோனியா தனது மகன் ராகுல் காந்தியை பிரதமராக்க நினைக்கிறார். அதற்கு வசதியாக ஆந்திராவை 2 ஆக பிரித்துள்ளனர்.

தெலுங்கானாவில் சந்திரசேகர்ராவுடனும், சீமாந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியுடனும் ரகசிய உடன்பாடு செய்து கொண்டு கூட்டணி அமைத்து அதிக நாடாளுமன்ற தொகுதிகளை கைப்பற்ற நினைக்கிறார். மாநில பிரிவினைக்கு முழு காரணமும் சோனியா காந்தி தான்” என்று மிக ஆவேசமாக கூறினார்.