Home நாடு “தொகுதி சீரமைப்பு மலாய் அதிகாரத்தைத் தக்க வைப்பதற்காக அல்ல” – தேர்தல் ஆணையம்

“தொகுதி சீரமைப்பு மலாய் அதிகாரத்தைத் தக்க வைப்பதற்காக அல்ல” – தேர்தல் ஆணையம்

568
0
SHARE
Ad

Tan-Sri-Abdul-Aziz-Mohd-Yusof2கோலாலம்பூர், நவ 27  – தேர்தல் ஆணையம் விரைவில் தொகுதி மறுசீரமைப்பு செய்யவிருப்பது மலாய் ஆட்சியை வலுப்படுத்தும் நோக்கத்தோடு அல்ல. மாறாக, கூட்டரசு அரசாங்கத்தின் கொள்கைகளைப் பின்பற்றும் நோக்கோடு இந்த தொகுதி சீரமைப்பு செய்யப்படுகிறது என்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் அப்துல் அஸீஸ் அப்துல் யூசோப் கூறியுள்ளார்.

மேலும், வாக்காளர்களின் எண்ணிக்கை, தொகுதியின் அமைந்திருக்கும் இடத்தின் அளவு, மாநில அரசாங்கத்தால் அப்பகுதிகளில் செய்யப்பட்டிருக்கும் வசதிகள் மற்றும் வாக்காளர்களின் வசதி (நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகள்) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் ஆணையம் தொகுதி மறுசீரமைப்பு செய்யும் என்றும் அஸீஸ் குறிப்பிட்டார்.

“மலேசிய மக்கள் என்று பிரதிபலிக்கும் வகையில் சீரமைப்பு செய்ய முயற்சி செய்கிறோம்” என்றும் அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice