Home இந்தியா காஷ்மீரில் பெண்களுக்கு சம உரிமை இல்லை: மோடி ஆதங்கம்

காஷ்மீரில் பெண்களுக்கு சம உரிமை இல்லை: மோடி ஆதங்கம்

513
0
SHARE
Ad

modi

ஜம்மு, டிசம்பர் 2- ‘நாட்டின் மற்ற மாநிலங்களில் பெண்களுக்கு அளிக்கப்படும் சம உரிமை போல் காஷ்மீரில் அளிக்கப்படுவது இல்லை,” என பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பா.ஜ., பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் முதல் முறையாக நேற்று, ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு சென்றார்.

#TamilSchoolmychoice

ஜம்மு பொதுக்கூட்டத்தில் அவர், “ ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் சட்டப்பிரிவு 370 அமலில் உள்ளது. இதன்மூலம், காஷ்மீர் மாநிலத்துக்கு சில சலுகைகள் கிடைப்பதாக கூறப்படுகிறது. ‘வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் காஷ்மீரில் இடம் வாங்க முடியாது’ என்பது இதில் உள்ள முக்கிய அம்சமாக கூறப்படுகிறது.இந்த சிறப்பு அதிகாரம் மூலம் காஷ்மீர் மாநிலத்துக்கும் அந்த மாநில மக்களுக்கும் உண்மையிலேயே பலன் கிடைக்கிறதா என்பது விவாதிக்கப்பட வேண்டிய விஷயம்.

ஏனெனில், நாட்டின் மற்ற மாநிலங்களில் பெண்களுக்கு ஆண்களுக்கு சமமான உரிமை வழங்கப்படுகிறது. ஆனால், காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரம் அந்த மாநிலத்தைச் சேர்ந்த பெண்களுக்கு சம உரிமை வழங்குவதற்கு முட்டுக் கட்டையாக உள்ளது.

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களை திருமணம் செய்தால் காஷ்மீரில், அவர்களின் ஓட்டு உரிமை பறிக்கப்பட்டு விடும். காஷ்மீர் குடியுரிமையும் பறிபோய் விடும்.இந்த மாநிலத்தின் முதல்வராக உள்ள தேசிய மாநாட்டு கட்சியைச் சேர்ந்த ஒமர் அப்துல்லா, வெளி மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

இதற்காக, ஒமர் அப்துல்லாவுக்கு மாநிலத்தில் உள்ள உரிமைகள் பறிக்கப்படவில்லை.ஆனால், ஒமர் அப்துல்லாவின் சகோதரி சாரா உ.பி., மாநிலத்தைச் சேர்ந்த, காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், மத்திய அமைச்சருமான, சச்சின் பைலட்டை திருமணம் செய்துள்ளார். இதனால், சாராவின் காஷ்மீர் உரிமைகள் பறிக்கப்பட்டு விட்டன. இந்த பாரபட்சம் கூடாது என்பது தான் என் கோரிக்கை.

சீனாவில் இந்திய எல்லைக்கு அருகில் வசிக்கும் கிராம மக்களுக்கு அந்த நாட்டு அரசு இலவசமாக ‘சிம்’கார்டுகளை கொடுத்து, இந்திய ராணுவத்தின் நடமாட்டத்தை பற்றிய தகவல்களை அறிந்து கொள்கிறது.மத்திய அரசும் இதேபோல் சீன எல்லைக்கு அருகில் வசிக்கும் நம் நாட்டைச் சேர்ந்த கிராம மக்களுக்கு இதுபோல் ‘சிம்’ கார்டு வழங்கலாமே? தொடர்ந்து நடக்கும், பயங்கரவாத சம்பவங்களால் காஷ்மீரில், சுற்றுலா துறை பாதிக்கப்பட்டு உள்ளது” என்று கூறினார்.