Home இலக்கியம் சர்வதேச கோடீஸ்வரர்கள் பட்டியலில் பிரிட்டன் ராணியை முந்தினார் சோனியா

சர்வதேச கோடீஸ்வரர்கள் பட்டியலில் பிரிட்டன் ராணியை முந்தினார் சோனியா

725
0
SHARE
Ad

sonia-gandhi

நியூயார்க் , டிசம்பர் 2- சர்வதேச அளவில் முன்னணி இணையதள செய்தி நிறுவனமான ஹப்பிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள உலகின் முதல் 20 இடங்களில் உள்ள கோடீஸ்வரர்கள் பட்டியலில், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா இடம்பெற்றுள்ளார். இப்பட்டியலில், பிரிட்டன் மகாராணி எலிசபெத்திற்கு முந்தைய இடத்தில் சோனியா உள்ளது குறிப்பிடத்தக்கது.

தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் சொத்துக்கள் உள்ளிட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு  ஹப்பிங்டன் போஸ்ட் நிறுவனம் சர்வதேச அளவிலான கோடீஸ்வரர்களின் பட்டியலை தயாரித்துள்ளது. இந்த பட்டியலில் நாட்டின் மன்னர்கள், அதிபர்கள், சுல்தான்கள், அரசிகள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் அதிகளவில் இடம்பெற்றுள்ளனர். பட்டியலின் முதல் 20 இடங்களில் இடம்பெற்றிருப்பவர்களில், 7 இடங்கள் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்தவர்களே ஆக்கிரமித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

சர்வதேச கோடீஸ்வரர்களின் பட்டியலில் முதல் 20 இடங்களை பெற்றுள்ள பிரபலங்கள் :

முதல் இடம் : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின். (சொத்து மதிப்பு 40 பில்லியன் அமெரிக்க டாலர்கள்)

இரண்டாம் இடம் : தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்யாதேஜ் (சொத்து மதிப்பு 30 பில்லியன் அமெரிக்க டாலர்கள், தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4,400 அமெரிக்க டாலர்கள்)

7ம் இடம் : வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் (சொத்து மதிப்பு 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள், தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1,800 அமெரிக்க டாலர்கள்)

12ம் இடம் : காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா (சொத்து மதிப்பு 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள், தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1,500 அமெரிக்க டாலர்கள்)

16ம் இடம் : சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத் (சொத்து மதிப்பு 550 மில்லியன் அமெரிக்க டாலர்கள், தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3,000 அமெரிக்க டாலர்கள்)

18ம் இடம் : பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் (சொத்து மதிப்பு 400 முதல் 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள், தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 38,000 அமெரிக்க டாலர்கள்)

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் உள்ள அரசியல் கட்சி தலைவர், பிரிட்டன் ராணி, ஓமன் சுல்தான், சிரியா அதிபர், குவைத் ஷேக் உள்ளிட்டவர்களை முந்தி, சர்வதேச கோடீஸ்வரர்களின் பட்டியலில் முன்னணி இடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.