கோலாலம்பூர், டிசம்பர் 3- நாட்டின் வளர்ந்து வரும் மலிவு விமான நிறுவனமான ஏர் மலிண்டோ இந்தியாவுக்கு தன் சிறகை விரிக்கும் என்று அதன் தலைமைச் செயல் அதிகாரி சந்திரன் ராமமூர்த்தி நேற்று அறிவித்தார்.
வரும் டிசம்பர் 30 ஆம் தேதி கோலாலம்பூரிலிருந்து டில்லிக்கு நேரடி விமானச் சேவையை மேற்கொள்ளும் அதேவேளையில் அடுத்த ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி முதல் கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கும், அடுத்த ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் கோலாலம்பூருக்கும் மும்பைக்கும் தனது சேவையை தொடங்கவிருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
இந்தியா தரப்பில் மலிண்டோ விமானங்கள் தரையிரங்க அனுமதி கிடைத்துள்ளது. இது எங்கள் சேவைக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என்று அவர் கூறினார்.
மேலும், இவ்வாய்ப்பின் மூலம் இந்தியா மற்றும் மலேசியாவுக்குமான சுற்றுப்பயணத் துறை இன்னும் விரிவாக்கம் அடையும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
திருச்சி, டில்லி, மும்பை நகர்களுக்கு செல்பவர்களுக்கு இச்சேவை ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். தொடந்து, இச்சேவை நம் நாட்டு சுற்றுலா துறைக்கு பெரிய பங்களிக்கும் என்றார்.
மேலும், பயணம் விவரங்களை அறிந்துக் கொள்ள www.malindoair.com என்ற அகப்பக்கத்தினை வலம் வாருங்கள்.