Home இந்தியா மோடியை குறைத்து மதிப்பிடவில்லை: பிரதமர் மன்மோகன் சிங்

மோடியை குறைத்து மதிப்பிடவில்லை: பிரதமர் மன்மோகன் சிங்

520
0
SHARE
Ad

Manmohan-Singh-Vs-Narendra-

புதுடெல்லி, டிசம்பர் 6- பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு தான் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துவருவதாகவும் அவரை தாம் குறைத்து மதிப்பிடவில்லை எனவும் மன்மோகன் கூறியுள்ளார்.

மேலும், அரசியல் கட்சி என்ற முறையில் எதிர்கட்சிகளின் சக்தியை குறைத்து மதிப்பிட முடியாது என கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

தனது அமைச்சரவை சகாக்களிடையே மோடி குறித்த கருத்து வேறுபாடு இருந்து வருவதாக கூறப்படுவது பற்றி கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்க்கட்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் தானும் ஒருவர் என்றும்,  தான் எப்போதும் எதிர்கட்சிகளை குறைத்து மதிப்பிடவில்லை எனவும் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி பொது தேர்தலை தனது சுய நம்பிக்கையின் பேரிலேயே சந்திக்க விரும்புவதாகவும், அது எவ்விதத்திலும் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பாதிக்காது எனவும் கூறியுள்ளார்.