கோலாலம்பூர், டிச 10 – லிட்டில் இந்தியாவில் ஏற்பட்ட கலவரம் தொடர்பில், அமைதி காக்குமாறு சிங்கப்பூர் அரசாங்கத்தை இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து சிங்கப்பூரிலுள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “லிட்டில் இந்தியாவில் விபத்தில் இறந்தவரின் அடையாளத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். இந்தியத் தூதரகம் அவரின் குடும்பத்தாருக்கு அது குறித்து தெரியப்படுத்திவிட்டது” என்று தெரிவித்துள்ளது.
அடையாளம் காணப்பட்ட இந்தியரின் பெயர் சக்திவேல் குரவேலு என்றும், அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரர் ஒருவர் வேகமாக வந்த ஓட்டிவரப்பட்ட தனியார் பேருந்து, லிட்டில் இந்தியா சந்திப்பு அருகே வந்தபோது அங்கு சாலையைக் கடக்க முயன்ற சக்திவேல் மீது மோதியது. இதில் அவர் படுகாயமடைந்து சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே மாண்டார்.
இதனால் அங்கு கூடியிருந்த 400 க்கும் மேற்பட்ட தெற்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அப்பேருந்தை அடித்து நொறுக்கியதோடு, பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை காயப்படுத்தினர் என்று கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக, 28 பேரை காவல்துறையினர் கைது செய்தனர் அவர்களில் 24 பேர் இந்தியர்கள் மற்றும் அதில் ஒரு மலேசியரும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.