Home இந்தியா ஏற்காடு தேர்தலில் வெற்றி பெற்ற சரோஜா சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்பு

ஏற்காடு தேர்தலில் வெற்றி பெற்ற சரோஜா சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்பு

621
0
SHARE
Ad

Jayalalithaa2

சென்னை, டிசம்பர் 10- ஏற்காடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் சரோஜா, நேற்று பகல் 12.36 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார். அவருக்கு சட்டப்பேரவை தலைவர் தனபால் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ஏற்காடு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சி.பெருமாள் கடந்த ஜூலை மாதம் 18ம் தேதி மாரடைப்பால் காலமானார். இதையொட்டி ஏற்காடு தொகுதிக்கு கடந்த 4ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் பெருமாளின் மனைவி சரோஜா, திமுக சார்பில் மாறன் மற்றும் 9 சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடந்தது. இதில் அதிமுக வேட்பாளர் சரோஜா, 78,116 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

#TamilSchoolmychoice

நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அனைத்து அமைச்சர்கள், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், கொறடா மோகன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்ட சரோஜாவுக்கு ஜெயலலிதா பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.