இந்த வார இறுதியில் இந்த தடை அமலுக்கு வரும் என்று அந்நாட்டில் இரண்டாம் உள்துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அதே நேரத்தில், அந்த பகுதியில் எந்த நேரத்தில் மதுவை தடை செய்யலாம், எந்தெந்த பகுதிகளில் மதுவைத் தடை செய்யலாம் என்பது குறித்தும் காவல்துறையினர் ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விபத்து நடந்தது தான் கலவரம் உருவாகக் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வந்தாலும், கலவரத்தில் ஈடுபட்டவர்கள் பலர் மது அருந்தி இருந்ததும் இந்த பிரச்சனை இவ்வளவு பெரிய கலவரமாக உருவாகக் காரணமாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.