Home கலை உலகம் ரஜினியின் ‘கோச்சடையான்’ வெளியீட்டு தேதி ஒத்திவைப்பு

ரஜினியின் ‘கோச்சடையான்’ வெளியீட்டு தேதி ஒத்திவைப்பு

493
0
SHARE
Ad

kochadiyaan

சென்னை, டிசம்பர் 11- ரஜினி நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட படம் ‘கோச்சடையான்’. இப்படம் மோஷன் கேப்சர்ஸ் என்ற புதிய தொழில்நுட்பத்தில் உருவாகி வருகிறது. இப்படத்தில் ரஜினி தந்தை, மகன் என இரண்டு வேடத்தில் நடிக்கிறார்.

தந்தை கதாபாத்திர ரஜினிக்கு ஷோபனா ஜோடியாகவும், மகன் கதாபாத்திரத்திற்கு தீபிகா படுகோனே ஜோடியாகவும் நடித்துள்ளனர். மேலும், சரத்குமார் நாசர், ஆதி உள்ளிட்ட பல நடிக, நடிகையரும் நடித்துள்ளார். இப்படத்தை ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

#TamilSchoolmychoice

கோச்சடையான் படம் , ரஜினியின் பிறந்தநாளுக்கு வெளியீடுவதாக கூறியிருந்தனர். ஆனால், சில காரணங்களுக்காக வெளியீட்டு தேதியை ஒத்தி வைத்துள்ளனர். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்ததையடுத்து இப்படத்தை வரும் ஜனவரி 10-ந் தேதி இப்படத்தை வெளியிடலாம் என்று கூறுகின்றனர். இருப்பினும், வெளியீட்டு நாள்  இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.