Home 13வது பொதுத் தேர்தல் மசீச தேர்தல்: வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்!

மசீச தேர்தல்: வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்!

914
0
SHARE
Ad

mcaliownominationpapers1612கோலாலம்பூர், டிச 16 – மசீச தேர்தலில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்கள் இன்று தங்களது வேட்புமனுவை மசீச தலைமையகத்தில் தாக்கல் செய்தனர்.

தங்களது தலைவர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்வதை உற்சாகப்படுத்தும் விதமாக மசீச உறுப்பினர்கள் சிவப்பு நிற சட்டை அணிந்து, கைகளில் பதாகைகளுடம் மசீச தலைமையகத்திற்கு வெளியே கூடி இருந்தனர்.

மதியம் 1 மணியளவில் தொடங்கிய வேட்புமனுத் தாக்கலில் அக்கட்சியின் துணைத்தலைவர் டத்தோஸ்ரீ லியோ தியாங் லாய், கான் பிங் சியூ ஆகியோர் தலைவர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்தனர்.

#TamilSchoolmychoice

துணைத்தலைவர் பதவிக்கு இளைஞர் பிரிவுத்தலைவர் டத்தோ டாக்டர் வீ கா சியாங் மற்றும் உதவித்தலைவர் டத்தோ டொனால்ட் லிம் சியாங் சாய் ஆகியோர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

4 உதவித்தலைவர் பதவிகளுக்கு 7 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

இதனிடையே அக்கட்சியின் 25 மத்திய செயலவை உறுப்பினர் பதவிகளுக்கு 42 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

இன்று மாலை 5 மணியோடு வேட்புமனுத் தாக்கல் நிறைவடைகிறது. வரும் வியாழக்கிழமை இளைஞர் பிரிவிற்கும், வெள்ளிக்கிழமை மகளிர் பிரிவுக்கும், சனிக்கிழமை கட்சி தலைமைத்துவ பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.