Home நாடு “ரஃபிசி எனது வங்கிக் கணக்கைப் பார்க்கலாம்” – சட்டத்துறைத் தலைவர்

“ரஃபிசி எனது வங்கிக் கணக்கைப் பார்க்கலாம்” – சட்டத்துறைத் தலைவர்

636
0
SHARE
Ad

ganipatail540px_1

#TamilSchoolmychoice

கோலாலம்பூர், டிசம்பர் 17 – உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் தனது வங்கிக் கணக்குகளை ஆராயும் அதிகாரப்பூர்வ கடிதத்தை தான் பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிஸி ரம்லிக்கு கொடுக்கத் தயாராவதாக மலேசிய சட்டத் துறைத் தலைவர் அப்துல் கனி பட்டேல் நேற்று அறிவித்துள்ளார்.

முன்னாள் கோலாலம்பூர் குற்றப் புலனாய்வுத்துறை இயக்குநர் மாட் சைன் கையெழுத்திட்டுள்ள 31 பக்க சத்தியப் பிரமாண அறிக்கையின்படி, விசாரணை நடத்தப்பட வேண்டும் என பிகேஆர் கட்சியின் வியூக இயக்குநரான ரஃபிசி ரம்லி வேண்டுகோள் விடுத்திருக்கின்றார். அந்த விசாரணைக்கு உதவ, தான் ஹாங்காங் அரசு அதிகாரிகளுடன் ஒத்துழைக்கப் போவதாகவும் ரஃபிசி அறிவித்திருந்தார்.

தன் மீது சுமத்தப்பட்டுள்ள இக்குற்றச்சாட்டுக்களை உறுதியாக மறுத்துள்ள அப்துல் கனி “இவை ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள். ஹாங்காங் உள்ளிட்ட எந்த வெளிநாட்டிலும் என் பெயரில் இருக்கும் வங்கிக் கணக்குகளைப் பார்வையிட ரஃபிசிக்கு நான் அதிகாரபூர்வ கடிதம் வழங்கத் தயாராக இருக்கின்றேன்” என்று தெரிவித்தார்.

அனைத்துலக நீதிமன்றத்தில் நடைபெற்ற பத்து பூத்தே தீவு மீதான மலேசியாவின் உரிமை கோரும் வழக்கில் மில்லியன் கணக்கான ரிங்கிட் கைமாறியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து அப்துல் கனி இவ்வாறு கூறியுள்ளார்.

அந்தக் கடிதத்தைப் பெற்றுக் கொள்ள எந்த நேரத்திலும் அவர் தனது அலுவலகம் வரலாம் என்றும் அப்துல் கனி கூறியுள்ளார்.