Home அரசியல் மக்கள் கூட்டணி வென்றால் அன்வார்தான் பிரதமர் – கர்ப்பால் சிங் மீண்டும் வலியுறுத்து

மக்கள் கூட்டணி வென்றால் அன்வார்தான் பிரதமர் – கர்ப்பால் சிங் மீண்டும் வலியுறுத்து

809
0
SHARE
Ad

Karpal-Feature

பினாங்கு, பிப்ரவரி 12 – மக்கள் கூட்டணி எதிர்வரும் பொதுத் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்தால் பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம்தான் பிரதமர் என்பதில் ஜசெக உறுதியாக இருப்பதாக ஜசெக தலைவர் கர்ப்பால் சிங் மீண்டும் ஒரு முறை வலியுறுத்தியுள்ளார்.

அன்வார் பிரதமராக வருவதில் பாஸ் கட்சி உடன்படவில்லை என்பது குறித்து எழுந்துள்ள விவாதங்கள் குறித்து கருத்துரைத்தபோது கர்ப்பால் இவ்வாறு கூறினார்.

#TamilSchoolmychoice

“அன்வார்தான் பிரதமர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர். இறுதியில் அன்வார் பிரதமராவதற்கு பாஸ் தலைமைத்துவமும் பிகேஆர் கட்சியும் முழுமையான ஒத்துழைப்பு வழங்கும்” என்று தான் எதிர்பார்ப்பதாகவும் கர்ப்பால் கூறினார்.

ஜசெகவைப் பொறுத்தவரையில் எங்களின் பிரதமர் தேர்வு அன்வார்தான் என்றும் கர்ப்பால் வலியுறுத்தினார்.

அன்வார் பிரதமராவதற்கு ஏற்கனவே பாஸ் கட்சி தலைவரும் கிளந்தான் முதலமைச்சருமான நிக் அசிஸ் ஒப்புதலும் ஆதரவும் வழங்கியிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.