Home இந்தியா இந்திய பெண் தூதர் தேவயானியின் மறுபக்கம்!

இந்திய பெண் தூதர் தேவயானியின் மறுபக்கம்!

439
0
SHARE
Ad

devani

நியூயார்க் டிசம்பர் 23- தேவயானி விவகாரத்தில் அவசரப்பட்டு அமெரிக்காவுடன் இந்தியா மோதுகிறதோ? ஒவ்வொன்றாக வெளிவரும் தகவல்கள் சந்தேகத்தை தூண்டுகின்றன.

வேலைக்காரி சங்கீதா விசா விண்ணப்பத்தில் தேவயானி தெரிந்தே தவறான தகவல்களை பதிவு செய்துள்ளார் என்பது முதல் புகார். அமெரிக்க அரசுக்கு அளித்த உறுதி மொழியை மீறி மிகக்குறைந்த  சம்பளம் கொடுத்துள்ளார். அதிக நேரம் வேலை வாங்கியுள்ளார். குறைவாக சம்பளம் வழங்க சங்கீதாவுடன் ரகசிய ஒப்பந்தம் போட்டு கையெழுத்து வாங்கியுள்ளார். விஷயம் வெளியே தெரிந்தாலோ, வேலையில் இருந்து விலக நினைத்தாலோ சங்கீதாவும், டெல்லியில் வசிக்கும் அவரது குடும்பத்தினரும் விளைவுகளை சந்திக்க நேரும் என மிரட்டியுள்ளார். அதன்படியே, சங்கீதா வேலைக்கு வராமல் நின்றதும் டெல்லி காவல்துறையினர் அவரது குடும்பத்துக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்தது.

#TamilSchoolmychoice

வழக்கு பதிவு செய்து, சங்கீதாவை கைது செய்து இந்தியாவுக்கு அனுப்ப பிடி ஆணை பெற்று அமெரிக்காவுக்கு அனுப்பியது. இதற்குள் சங்கீதா அமெரிக்க காவல்நிலையத்தில் புகார் கொடுத்து, அவர்கள் அதிர்ச்சி அடைந்து சங்கீதாவின் குடும்பத்தை அங்கு வரவழைத்துள்ளனர். இதுதான் மறுதரப்பு தகவல்கள்.

இவை ஒன்றுக்குகூட தேவயானி தரப்பு மறுக்கவில்லை. தேவயானி இந்திய அரசில் மிக உயர்ந்த  பதவி வகிப்பவருக்கு உறவினர் என்பதும், பெரும் பணக்காரர் என்பதும், தவறான வழியில் சொத்துக்கள் வாங்கியதாக விசாரணை ஆணையரால் கண்டிக்கப்பட்டவர் என்பதும் கூடுதல் செய்திகள். முன் ஜாமீன் பெறுவது, கைதானதும் நெஞ்சுவலி எனக்கூறி மதுத்துவமனையில் சேர்வது இதெல்லாம் அமெரிக்காவில் கிடையாது.

‘எங்கள் சட்டங்கள் பணம், பதவி, அந்தஸ்து, இனம் எதையும் கண்டுகொள்ளாது. குற்றம் சாட்டப்பட்டவர்கள்  எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் கேவலமான நபராக இருந்தாலும் ஒரே மாதிரிதான் நடத்துவோம். சலுகைகள் கிடையாது. எனினும் தேவயானி கைத்தொலைப்பேசியில் பேச அனுமதித்தோம். காபி தந்து உபசரித்தோம். எந்த வகையிலும் அவரை அவமதிக்கவில்லை’ . ஆகையால், அடுத்தடுத்து தவறான தகவல் கொடுத்து பழக்கப்பட்டவர் அமெரிக்க காவல்துறை அதிகாரி பற்றி சொல்வதை அப்படியே நிறுத்தி விட வேண்டும் என அமெரிக்கா கூறியது.