Home 13வது பொதுத் தேர்தல் மஇகா தேர்தல் முறைகேடுகளை விசாரிக்கத் தனிக் குழு அமைக்க வேண்டும் – டி.மோகன்

மஇகா தேர்தல் முறைகேடுகளை விசாரிக்கத் தனிக் குழு அமைக்க வேண்டும் – டி.மோகன்

967
0
SHARE
Ad

tmohan

கோலாலம்பூர், டிசம்பர் 24 –  அண்மையில் நடைபெற்று முடிந்த மஇகா தேர்தலில் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாக பல முறை புகார் செய்தும் மஇகா தேசிய தலைவர் டத்தோ ஸ்ரீ ஜி.பழனிவேல் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் மெளனமாக இருப்பது கட்சியின் தலைமைத்துவத்திற்கு சிறந்ததல்ல என  மஇகா இளைஞர் பகுதியின் முன்னாள் தலைவர் டத்தோ டி.மோகன் தெரிவித்தார்.

மஇகா தேர்தல் முறைகேடுகளை விசாரிக்க தனி விசாரணைக் குழு அமைக்க வேண்டும் . அதுவும் 14 நாட்களுக்குள் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் . நடவடிக்கை ஏதும் எடுக்காவிட்டால், சங்கங்களின் பதி விலாகாவிடம் புகார் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

தேர்தலில் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாகக் கூறி சங்கங்களின் பதவிலாகாவிடம் கூறி போராட்டங்கள் செய்திருக்கலாம். ஆனால், கட்சியின் நலன் கருதி அதுபோன்ற காரியங்களை நாங்கள் செய்யவில்லை என்றார்.

தேர்தலின் அதிருப்தியை வெளிப்படுத்துவதற்காக மஇகா தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ ஜி.பழனிவேல், துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ சுப்பிரமணியம் ஆகியோரிடம் மகஜர் வங்க திட்டமிட்டோம்.

தேசியத் தலைவர் வெளியூரில் இருப்பதாக கூறுவதால், துணைத்தலைவரிடம் அந்த மகஜரை வழங்கினோம். உதவித் தலைவருக்கு  போட்டியிட்ட என்னுடன் இணைந்து மத்திய செயலவைக்குப் போட்டியிட்டவர்கள் 25 பேர் மற்றும் தொகுதி தேர்தலில் போட்டியிட்டவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அம்மகஜரை வழங்கினோம். ஆனால், இதுவரையிலும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது பெரும் ஏமாற்றம் அளிப்பதாக கூறினார்.

எனவே, எங்களின் புகார்களை விசாரிக்க தனி விசாரணைக்குழு ஒன்று அமைக்க வேண்டும். குறிப்பாக இன்னும் 14 நாட்களுக்குள்  இந்த பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும். இக்காலக்கெடுவை மீறினால் நாங்கள் சங்கங்களின் பதவிலாகாவை அணுகுவோம் என்று டி.மோகன் திட்டவட்டமாக கூறினார். தனிக்குழு அமைத்து தேர்தல் முறைகேடுகள் குறித்து எடுக்கப்படும் எந்த முடிவுக்கும் தாம் கட்டுப்பட தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

டத்தோ முனியாண்டி, முன்னாள் மத்திய செயலவை உறுப்பினர் மது மாரிமுத்து, ஆனந்தன் சு.வை.லிங்கம், மஇகா செத்தியா வங்சா தொகுதி தலைவர் ராஜா, டத்தோ பெரு.கருப்பன உட்பட மத்திய செயலவைப் பதவிக்கு போட்டியிட்ட 20 பேருக்கும் மேற்பட்டவர்கள் இந்த மகஜரை டத்தோ ஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியத்திடம் வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.