Home உலகம் 2013–ம் ஆண்டில் உலக அளவில் 70 பத்திரிகையாளர்கள் கொலை

2013–ம் ஆண்டில் உலக அளவில் 70 பத்திரிகையாளர்கள் கொலை

619
0
SHARE
Ad

murder

நியூயார்க், டிசம்பர் 31– உலக நடப்புகளை சேகரித்து பத்திரிகை, ஊடகம் உள்ளிட்ட நிருபர்கள் செய்திகளை அளித்து வருகின்றனர். போர்முனை, உள்நாட்டு கலவரம் நடைபெறும் பகுதிகளில் பணியில் ஈடுபடும் அவர்கள் உயிரிழக்க நேரிடுகிறது.

எனவே, அவர்களை பாதுகாக்க நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு ‘பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பு சங்கம்’ என்ற அமைப்பு நடத்த 1981–ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

#TamilSchoolmychoice

இந்த ஆண்டில் பணியின் போது கொலை செய்யப்பட்ட பத்திரிக்கையாளர்கள் குறித்து இச்சங்கம் ஆய்வு நடத்தியது. அதில், சர்வதேச அளவில் இதுவரை 70 பேர் கொல்லப்பட்டிருப்பது தெரியவந்தது.

இவர்களில் மூன்றில் இரண்டு மடங்கு பேர் மத்திய கிழக்கு நாடுகளான பாகிஸ்தான், சோமாலியா, இந்தியா, பிரேசில், பிலிப்பைன்ஸ், நாடுகளில் கொலை செய்யப்பட்டுள்னர்.

இதில் பாகிஸ்தான் மற்றும் சோமாலியாவில் தான் அதிகம் பேர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் மட்டும் 5 பேர் கொலையுண்டு இருக்கின்றனர்.

தற்போது உள்நாட்டு போர் நடைபெற்று வரும் சிரியாவில் 29 பேர் பலியாகியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் லெபனான் மற்றும் துருக்கு எல்லையில் உயிரிழந்துள்ளனர்.

பணியின் போது கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர்களை பொறுத்தவரை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இறந்தவர்களின் எண்ணிக்கை குறைவாகும். ஏனெனில் கடந்த ஆண்டு 74 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.