Home நாடு “பிரச்சனைகளை கையாளும் போது நிதானம் தேவை” – நஜிப் வலியுறுத்தல்

“பிரச்சனைகளை கையாளும் போது நிதானம் தேவை” – நஜிப் வலியுறுத்தல்

723
0
SHARE
Ad

Najib-300-x-200புத்ர ஜெயா, ஜன 6 – நாட்டின் அமைதியையும், நல்லிணக்கத்தையும் கெடுக்கக்கூடிய விவகாரங்களை பேச்சுவார்த்தை மற்றும் நன்னடத்தையின் மூலம் ஒழித்து விடலாம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான விவகாரங்களைக் கையாள்பவர்கள் உணர்ச்சிவசப்படாமல், அறிவுப்பூர்வமாக செயல்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து நஜிப் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாம் ஒன்றாக அமர்ந்து எந்த ஒரு விவகாரத்தையும் பேச்சுவார்த்தை நடத்தினாலும் அதற்கு தக்க தீர்வு கிடைக்கும். சட்டத்தின் படி எந்த ஒரு விவகாரத்தையும் அமைதியுடன் கையாள வேண்டும்” என்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

சமுதாயம் இரண்டு பட்டால் இதுவரை நாட்டில் அமைதியும், நல்லிணக்கமும் நிலைத்திருக்க, நாம் அனுபவித்து வந்த சந்தோஷங்கள் அனைத்திற்கும் அர்த்தமில்லாமல் போய்விடும் என்றும் நஜிப் தெரிவித்தார்.

இஸ்லாமியர்களுக்கும், கிறித்தவர்களுக்கும் இடையே தற்போது ‘அல்லா’ விவகாரம் வலுத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி, த கத்தோலிக் வார இதழின் ஆசிரியர் லாரென்ஸ் ஆண்டிரியூ, சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள தேவாலயங்களில் பிரார்த்தனையின் போது கடவுளைக் குறிக்க மலாய் மொழியில் ‘அல்லா’ என்ற சொல்லைப் பயன்படுத்தலாம் என்று கூறினார்.

இதனால் இவ்விவகாரம் மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.