Home கலை உலகம் தெலுங்கு நடிகர் உதய் கிரண் தூக்கு போட்டு தற்கொலை!

தெலுங்கு நடிகர் உதய் கிரண் தூக்கு போட்டு தற்கொலை!

730
0
SHARE
Ad

udaykiran

ஹைதெராபாத், ஜன 6- தெலுங்கு நடிகரான உதய் கிரண் தனது வீட்டில் நேற்றிரவு தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவைச் சேர்ந்த உதயகிரன் 16 தெலுங்கு படங்களிலும் 3 தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

#TamilSchoolmychoice

புஞ்சகட்டாவின் ஸ்ரீநகர் காலனியில் வசிக்கும் இவர் தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அவரது அறையில் தூக்கில் தொங்கியதை பார்த்த அவரது மனைவி விஷிதா மற்றும் அருகிலுள்ள வீட்டினர் அவரை மீட்டு ஜுப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்த்தனர்.

ஆனால் அவரது உடலை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால் இவர் எதற்காக தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுத்தார் என இதுவரை தெரியவில்லை, இதுதொடர்பாக காவல்துறையினர்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவரது மறைவுக்கு தெலுங்கு திரையுலகம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. திரையுலகத்தை சேர்ந்த பல்வேறு நபர்கள் மருத்துவமனைக்கு உடனடியாக விரைந்து சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திவருகின்றனர்.